| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a வீரபத்திரர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a 64 சிவ வடிவங்களுள் ஒன்றான வீரபத்திரர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a தாராசுரத்திலுள்ள வீரபத்திரர் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார். வலது காலை தொங்கவிட்டு தாமரைப்பீடத்தின் மீது வைத்தபடியும், இடது காலை மடக்கியும் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். பூரிமத்துடன் கூடிய சுடர் முடியை தலைக்கோலமாய் கொண்டுள்ளார். முத்துத் தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டையும், முக்கண்ணும் நெற்றியில் விளங்குகின்றன. செவிகளில் பத்ரகுண்டலங்கள் தரித்துள்ளார். கழுத்தில் கண்டிகை, அரும்புச்சரம், சரப்பளி ஆகியவணிகளும், மார்பில் ஸ்தன சூத்திரமும், முப்புரிநூலும் விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய அரையாடை, கைகளில் தோள் மாலை, தோள்வளை, முன்வளை, விரல்களில் வளையங்கள் ஆகியன துலங்குகின்றன. வீரபத்திரர் நான்கு திருக்கைகளில் முன்னிரு கைகளில் நீண்ட வாளையும் கேடயத்தையும் பிடித்துள்ளார். பின்னிரு கைகளில் வில்லையும், அம்பையும் கொண்டுள்ளார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வீரபத்திரர் வீரத்தின் அடையாளமாகவும், பகைவரை வெருட்டுபவராகவும் காட்டப்பட்டுள்ளார். |
| 653 | : | _ _ |a வீரபத்திரர், வீரபத்ரர், அகோர வீரபத்ரர், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000353 |
| barcode | : | TVA_SCL_000353 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |